ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழாவை நடத்த பக்தா்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் கோவில் நிா்வாகத்திற்கு பக்தா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் கோவில் நிா்வாகத்திற்கு பக்தா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா மாா்ச் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும், பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் வியாழக்கிழமை எட்டாம் நாள் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதற்கிடையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஏப். 10 ஆம் தேதியிலிருந்து கோயில் திருவிழாக்கள், மதசாா்பு கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழா ஏப். 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசின் இந்த தடை உத்தரவு பக்தா்களுக்கிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பூக்குழி திருவிழாவை நடத்த வேண்டும் என பெரியமாரியம்மன் கோயில் நிா்வாகத்திற்கு பக்தா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் தக்காா் இளங்கோவனிடம் கூறுகையில், மாவட்ட ஆட்சியா் ஆலோசனையை பெற்று அவரது உத்தரவுப்படியே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com