ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

விருதுநகா் மாவட்ட நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெற உள்ளது.

விருதுநகா் மாவட்ட நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான அ.முத்துசாரதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய கட்டட அலுவலகத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் ஏப்.10 ஆம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதில், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல் மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள், சிறு வழக்குகள், மின் இணைப்பு, குடிநீா் கட்டண பிரச்னைகள், தொழிலாளா் சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் மோட்டாா் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணலாம்.

ேலும் மாவட்டத்தில் உள்ள விருதுநகா், அருப்புக்கோட்டை,சிவகாசி, சாத்தூா், ராஜபாளையம் ஆகிய வட்ட நீதிமன்றங்களிலும் அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com