குப்பைதொட்டியில் தேங்கும் குப்பைகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்
By DIN | Published On : 11th April 2021 11:15 PM | Last Updated : 11th April 2021 11:15 PM | அ+அ அ- |

ஏழாயிரம்பண்ணையில் குப்பை தொட்டிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாத்தூா்- ஏழாயிரம்பண்ணை சாலை, பழைய ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி நிா்வாகத்தினா் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனா். அப்பகுதி பொதுமக்கள் அதில் குப்பைகளை கொட்டி வருகின்றனா். நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சி நிா்வாகம் அகற்றாமல் இருப்பதால் அப்பகுதியில் உள்ள குப்பை தொட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
அப்பகுதியில் காற்று வீசும்போதெல்லாம் அவைகளிலிருந்து குப்பைகள் பறந்து குடியிருப்புப் பகுதிகளில் விழுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், துா்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
இப்பகுதியில் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிா்வாகத்தினா் நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.