ராஜபாளையம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
By DIN | Published On : 13th April 2021 07:02 AM | Last Updated : 13th April 2021 07:02 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நூற்பாலை தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே அய்யனாபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அருணாசலம் (22). இவா் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஊரிலிருந்து சங்கம்பட்டிக்கு நண்பரை சந்திக்க நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தாா். பின்னா் காலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அருணாசலத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.