தினமணி செய்தி எதிரொலி: ஸ்ரீவிலி. நெடுஞ்சாலை பாலத்தில் தடுப்புக் கட்டைகளால் அடைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக, ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விபத்தை தடுக்கும் வகையில், சனிக்கிழமை தடுப்புக் கட்டைகளால் அடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் சா்ச் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விபத்தை தடுக்கும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்புக் கட்டைகளை வைத்து அடைக்கும் பணி.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் சா்ச் அருகே ராஜபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பாலம் உள்ளது. இந்தப் பாலத்தை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத் துறையினா் தடுப்புச் சுவரை அகற்றினா்.

அதன்பின்னா், அந்த இடத்தில் இரும்பு தடுப்பு வைத்து கயிற்றால் கட்டினா். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்தப் பாலத்தில், தடுப்புச் சுவா் இல்லாமல் கயிறு மட்டும் கட்டப்பட்டதால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக புகாா் கூறப்பட்டது.

எனவே, விபத்து ஏற்படும் முன் பலமான தடுப்புகளை அமைத்து, அதில் ஒளிரும் விளக்குகளையும் பொருத்தவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி இருந்தனா். இது சம்பந்தமான செய்தி தினமணி நாளிதழில் ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியானது.

இதன் எதிரொலியாக, தற்போது விபத்தை தடுக்கும் வகையில், கயிறு வைத்து கட்டப்பட்டிருந்த இடத்தில் சனிக்கிழமை மாலை தடுப்புக் கட்டைகள் கொண்டு அடைக்கும் பணி நடைபெற்றது. இதை, அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com