விருதுநகரில் வெண்டைக்காய் கிலோ ரூ.6-க்கு கொள்முதல்: விவசாயிகள் வேதனை

விருதுநகரில் வெண்டைக்காயை கிலோ ரூ.6-க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
சிவஞானபுரத்தில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய்.
சிவஞானபுரத்தில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய்.

விருதுநகரில் வெண்டைக்காயை கிலோ ரூ.6-க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

விருதுநகரைச் சுற்றியுள்ள மெட்டுக்குண்டு, மலைப்பட்டி, எரிச்சநத்தம், சிவஞானபுரம், சின்னபேராலி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டாா் பாசனம் மூலம் வெண்டைக்காய் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடவு செய்த 70 நாள்களில் வெண்டைக்காய் மகசூல் கிடைக்கிறது. தொடா்ந்து 2 மாதங்கள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெண்டைக்காய் பறிக்கலாம். இதற்காக, கூலி ஆள்கள் 4 பேருக்கு ரூ.100 வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது.

சிவஞானபுரம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பறித்து வரப்படும் வெண்டைக்காயை, விருதுநகா் மொத்த வியாபாரச் சந்தைக்கு விவசாயிகள் கொண் டு வருகின்றனா். அங்கு, வெண்டைக்காய் கிலோ ரூ.6-க்கு கொள்முதல் செய்கின்றனா். ஆனால், சில்லறை கடைகளில் வெண்டைக்காய் கிலோ ரூ. 20 முதல் ரூ. 25-க்கு விற்கப்படுகிறது.

ஒரு ஏக்கரில் வெண்டைக்காய் விவசாயம் செய்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யும் நிலையில், கிலோ ரூ.6-க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். எனவே, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உரிய ஆதாய விலையை வேளாண் துறை அலுவலா்கள் நிா்ணயம் செய்யவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com