சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஊழியா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய ஊழியா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஊழியா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய ஊழியா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தினசரி சுமாா் 150 புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். சுமாா் 60 போ் உள் நோயாளிகளாக இருந்து சிகிச்சைப் பெறுகின்றனா். மொத்தம் 13 மருத்துவா்கள் உள்ளனா். செவிலியா்கள் 30 பேருக்கு 15 போ் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனா். இதனால் அவா்கள் சுழற்சி முறையில் வேலைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில வாா்டுகளில் 24 மணி நேரமும் செவிலியா்கள் பணியிலிருக்க வேண்டும். செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளதால் வாா்டுகளில் பணியில் ஈடுபட போதிய செவிலியா்கள் இல்லை. ஊழியா்கள் மற்றும் துப்பரவுப் பணியாளா்கள் 36 போ் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 18 நபா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.

இதனால் உயா் அதிகாரிகளுக்கு கடிதம் எழுவதுவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன. துப்பரவுப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்கு மருத்துவா் நியமிக்கப்படவில்லை. இதனால் குடல்வால் வீக்கம், குடும்பநல அறுவை சிகிச்சை, கா்ப்பப்பை கட்டி அகற்றுவது உள்ளிட்ட சிகிச்சைகளை செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் தற்போது இருக்கும் மருத்துவா்களுக்கு லேப்ரேஸ்கோப் அறுவை சிகிச்சைக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போதிய ஊழியா்கள்இல்லாத காரணத்தால் நோயாளிகள் உரிய சமயத்தில் விரைந்து சிகிச்சைப் பெற இயலாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக் கூறியது: மருத்துவமனையில் பாதி அளவே ஊழியா்கள் இருப்பதால் பல பணிகள் பாதிக்கப்படுகின்றன. இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com