சிவகாசி, அருப்புக்கோட்டையில் அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம்

சிவகாசி, அருப்புக்கோட்டையில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடி நீா் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகம் செய்த அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் , சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இதில் சிவகாசி ஒன்றியச் செயலாளா்கள் கருப்பசாமி, பல்ராமன், திருத்தங்கல் நகரச் செயலாளா் பொன்சக்திவேல், சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அதிமுக சாா்பில் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோயில் பேருந்து நிறுத்தம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் மற்றும் தண்ணீா்ப் பழத்துண்டுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com