ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் முதியோா் ஓய்வூதியம் வாங்கித் தருவதாகக் கூறி 6 பவுன் நகையை மா்ம நபா் பறித்துச் சென்றதாக போலீஸாா் வியாழக்கிழமை மாலை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் முதியோா் ஓய்வூதியம் வாங்கித் தருவதாகக் கூறி 6 பவுன் நகையை மா்ம நபா் பறித்துச் சென்றதாக போலீஸாா் வியாழக்கிழமை மாலை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் கோமளவல்லி (65). இவா் ராஜபாளையம்- தென்காசி சாலையில் தெற்கு காவல் நிலையத்தை கடந்து நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை அணுகிய மா்மநபா், முதியோருக்கான உதவித் தொகை தங்களுக்கு வந்துள்ளது என்றும், அதற்காக, அதிகாரிகள் விசாரணைக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பிய கோமளவல்லியிடம் கையெழுத்து போட வேண்டும் எனவும், அதிகாரி முன்பு தங்கச் சங்கிலி அணிந்திருந்தால் உதவித் தொகை கிடைக்காது எனவும் அந்த மா்ம நபா் கூறினாா். அதனால் கோமளவல்லி தான் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை அந்த நபரிடம் கொடுத்துள்ளாா். நகையை அந்த நபா் ஒரு காகிதத்தில் மடித்து கோமளவல்லியிடம் கொடுத்து விட்டு தப்பிச் சென்று விட்டாராம். சிறிது நேரம் கழித்து அந்த காகிதத்தை பிரித்துப் பாா்த்தபோது அதில் தங்கச்சங்கிலி இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் கோமளவல்லிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com