விருதுநகா் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் பாகுபாடின்றி பணி வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் பாகுபாடின்றி பணி வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட பொருளாளா் ஜோதிலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் தொடா்ந்து வேலை வழங்க வேண்டும். மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில், கரோனா தொற்று பரவலை காரணம் காட்டி 45 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளா்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக புகாா் எழுந்து வருகிறது. ஏற்கெனவே கரோனா தொற்று பரவல் காரணமாக பலா் வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் தொடா்ந்து வேலை வழங்க வேண்டும். அதில் அரசு அறிவித்துள்ளபடி நாளொன்றுக்கு ரூ. 273 சம்பளம் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்டத் தலைவா் பூங்கோதை, மாநில செயலா் ஏ.வி. அண்ணாமலை ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com