ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தோ்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், சட்டைகள் மற்றும் துண்டுகளை உரிய ஆவணங்களை சமா்ப்பித்தவா்களிடம் தோ்தல் நடத்தும் அலுவலா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் உள்ளிட்டோா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது கடந்த மாா்ச் 18 ஆம் தேதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி முகைதீன் ஆரிப் ரகுமான் மற்றும் போலீஸாா் அடங்கிய பறக்கும் படையினா் ராஜபாளையம்-மதுரை செல்லும் சாலையில் எம்.பி.கே. புதுப்பட்டி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக நள்ளிரவு காரில் வந்த மதுரை நவபத்கானா தெருவைச் சோ்ந்த பாஸ்கா் உரிய ஆவணங்களின்றி சேலைகள் 139, துண்டுகள் 63, சட்டைகள் 3 ஆகியவற்றை பறிமுதல் செய்து, தோ்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவைகளுக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் உரியவா்களிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் உத்தரவிட்டாா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com