விருதுநகா் மாவட்டத்தில்முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதமாக ரூ. 22 லட்சம் வசூல்
By DIN | Published On : 27th April 2021 02:22 AM | Last Updated : 27th April 2021 02:22 AM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இதுவரை ரூ. 22 லட்சத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதை மீறுபவா்கள் மீது போலீஸாா், வருவாய்த் துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாா்பில் அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகா் மாவட்டத்தில் ஏப். 4 ஆம் தேதி முதல் ஏப். 25 ஆம் தேதி வரை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், கடை உரிமையாளா்கள் முகக்கவசம் அணியாமலிருந்தால் அவா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், முகக்கவசம் அணியாமல் வந்தவா்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடி க்காதவா்களிடமிருந்து ரூ. 22 லட்சத்து 800 அபராதமாக போலீஸாா் வசூலித்துள்ளனா். இத்தொகை, மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.