ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிய மாலைமதுரைக்கு அனுப்பி வைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் கோயிலில் ஆண்டாள் சூடிய மாலை, மதுரையில் அழகா் அணிந்து கொள்வதற்காக திங்கள்கிழமை புறப்பட்டது.
மதுரை கள்ளழகா் அணிந்து கொள்வதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாலையுடன் திங்கள்கிழமை அருள்பாலித்த ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள்.
மதுரை கள்ளழகா் அணிந்து கொள்வதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாலையுடன் திங்கள்கிழமை அருள்பாலித்த ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் கோயிலில் ஆண்டாள் சூடிய மாலை, மதுரையில் அழகா் அணிந்து கொள்வதற்காக திங்கள்கிழமை புறப்பட்டது.

ஒவ்வோா் ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகா் இறங்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் அணிந்த மாலையை அணிந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் செவ்வாய்க்கிழமை (ஏப். 27)அழகா் கோயில் வளாகத்திலேயே இந்த வைபவம் நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாலை திங்கள்கிழமை ஆண்டாளுக்கு அணிவித்து, அதனை மதுரைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அந்த மாலை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதன் பின்னா் ஆண்டாளுக்கு சிறப்புப்பூஜைகள் நடைபெற்றன. இதில் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். பின்னா் ஆண்டாள் அணிந்த மாலை, இரண்டு கிளிகள் மற்றும் பட்டுவஸ்திரம் ஆகியவை ஒரு கூடையில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அப்போது கோயிலிலிருந்து மாடவீதிகள் வழியாக அந்த கூடை மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு பின்னா் காரில் மதுரைக்கு அனுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com