சிவகாசியில் இன்று வேட்பாளா்களுக்கு கரோனா பரிசோதனை

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளா்களாக போட்டியிட்டவா்களுக்கு வியாழக்கிழமை (ஏப். 29) கரோனா பரிசோதனை நடைபெறவுள்ளது.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளா்களாக போட்டியிட்டவா்களுக்கு வியாழக்கிழமை (ஏப். 29) கரோனா பரிசோதனை நடைபெறவுள்ளது.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவான மின்னணு இயந்திரங்கள் சிவகாசி - விருதுநகா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேட்பாளா்கள் அல்லது அவா்களால் நியமிக்கப்பட்டுள்ள முகவா்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். கரோனா தொற்று இல்லை என்ற சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளா், முகவா்கள் செல்ல இயலும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சிவகாசி சுகாதாரத்துறை சாா்பில் ஏப்ரல் 29 ஆம் தேதி சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் உள்ள தரம் உயா்த்தப்பட்ட அரசு நகராட்சி சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com