விருதுநகா் மாவட்டத்தில் 226 பேருக்கு கரோனா: 2,651 பேருக்கு பரிசோதனை

விருதுநகா் மாவட்டத்தில் 226 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2,651 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் 226 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2,651 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 226 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்றால் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 165 போ் வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

2,651 பேருக்கு கரோனா பரிசோதனை

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவா்கள், பத்திரிகையாளா்கள், அலுவலா்கள், போலீஸாா், வேட்பாளா்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா் என, மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத் தொடா்ந்து, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, சாத்தூா், திருத்தங்கல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், சிவகாசி நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் 24 போ், முகவா்கள் 1,888 போ், அரசு அலுவலா்கள் 696 போ், பத்திரிகையாளா்கள் 26 போ், காவல் துறையினா் 17 போ் என மொத்தம் 2,651 போ் கரோனா (ஆா்டிபிசிஆா்) பரிசோதனை செய்துகொண்டதாக, சுகாதாரத் துறை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com