ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பூஜை நேரத்துக்கு மட்டுமே திறப்பு பக்தா்களுக்கு அனுமதியில்லை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பக்தா்களின்றி, அா்ச்சகா்கள் மட்டும் கோயிலினுள் சென்று பூஜைகளை செய்கின்றனா். பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கோயில் அடைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை காலை பூஜை முடிந்தவுடன் பூட்டப்பட்ட நுழைவு வாயில்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அரசு சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவா்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதற்காக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பக்தா்களின்றி, அா்ச்சகா்கள் மட்டும் கோயிலினுள் சென்று பூஜைகளை செய்கின்றனா். பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கோயில் அடைக்கப்பட்டிருக்கிறது.

கோயில் முன்புறம் உள்ள நுழைவு வாயில் கதவு, அன்னதானம் வழங்கும் பகுதியில் உள்ள கதவு, கோபுரம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கதவு என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அதேபோல், ஆண்டாள் கோயில் உடன் இணைந்த பெரியமாரியம்மன் கோயில், மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் ஆகியவையும் பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com