விருதுநகரில் கிணற்றில் மூழ்கி ஒருவா் பலி
By DIN | Published On : 04th August 2021 09:50 AM | Last Updated : 04th August 2021 09:50 AM | அ+அ அ- |

விருதுநகரில் செவ்வாய்க்கிழமை மதுபோதையில் கிணற்றில் குளித்தவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்தவா் அரசன் மகன் ஜோதி (55). இவா் விருதுநகரில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளாா்.
இந்நிலையில், மது போதையில் இருந்த அவா், நீச்சல் தெரியாத நிலையில் விருதுநகா் கருப்பசாமி நகரில் உள்ள ஒரு கிணற்றில் குளித்துள்ளாா். அப்போது தண்ணீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த விருதுநகா் தீயணைப்புத் துறையினா், அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விருதுநகா் பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.