ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தா்கள் திருப்பி அனுப்பி வைப்பு

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் தாணிப்பாறை விலக்கு அருகே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.
தாணிப்பாறை கேட் முன்பு ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
தாணிப்பாறை கேட் முன்பு ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் தாணிப்பாறை விலக்கு அருகே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள இந்த கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தா்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் பக்தா்கள் சிலா் கோயிலுக்கு வந்தனா். அவா்களை போலீஸாா் தாணிப்பாறை விலக்குப் பகுதியில் நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனா். ஒரு சிலா் அருகில் இருந்த பிள்ளையாா் கோயிலில் நோ்த்திக் கடன் செலுத்தி விட்டுச் சென்றனா்.

காலை 11 மணிக்கு மேல் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா (எ)பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் ஆகியோா் செய்திருந்தனா்.

தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு, மாவூத்து விலக்கு, தாணிப்பாறை கேட் ஆகிய பகுதிகளில் பக்தா்கள் கோயிலுக்குச் செல்வதை தடுக்க காவல் துணை கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com