சிவகாசி வட்டத்தில் 14 மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி
By DIN | Published On : 08th August 2021 11:03 PM | Last Updated : 08th August 2021 11:03 PM | அ+அ அ- |

சிவகாசி வட்டத்தில் 14 மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிவகாசி சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, அரிமா சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சிவகாசி பழைய நகராட்சி அலுவலகம், திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி வட்டாட்சியா் அலுவலகம், எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 14 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மையத்திற்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மூலம் அழைத்து வரப்பட்டனா். மேலும் பல மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்குச் சென்று தடுப்பூசி செலுத்தினா். 14 மையங்கள் மூலம் 550 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.