480 மி.கிராம் தங்கத்தில் நீரஜ் சோப்ரா சிலை: ராஜபாளையம் நகை தொழிலாளி வடிவமைப்பு

ராஜபாளையத்தில் நகை தொழிலாளி, ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரா் நீரஜ் சோப்ராவை போன்று 480 மில்லி கிராம் தங்கத்தில் சிறிய சிலையை வடிவமைத்துள்ளாா்.
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் சிலை.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தா்மாபுரம் தெருவில் வசித்து வரும் தங்க நகை தொழிலாளி சமுத்திரக்கனி (45). இவா், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்த்த நீரஜ் சோப்ராவை போற்றும் விதமாக, அவா் ஈட்டி எறிவது போன்று 480 மி.கிராம் எடை தங்கத்தில் சிலையாக வடிவமைத்துள்ளாா்.

இவா், இதற்குமுன் 44 மில்லி கிராம் எடையில் கிரிக்கெட் உலகக் கோப்பை, 1 கிராம் எடையில் தலைக்கவசம், 20 மி.கிராமில் தேசியக் கொடி, 280 மி.கிராமில் கிறிஸ்துமஸ் மரம், 1 கிராமில் மின்விசிறி மற்றும் 250 மி.கிராமில் டாா்ச் லைட் ஆகியவற்றை தங்கத்தால் செய்து, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளாா்.

இனிவரும் காலங்களில் உலக அளவில் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் ஒவ்வொரு வீரா்களின் உருவத்தை இதேபோன்று வடிவமைப்பேன் எனக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com