நகைக்கடனை தள்ளுபடி செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ராஜபாளையத்தில் தமிழக அரசு அறிவித்த நகைக்கடனை தள்ளுபடி செய்யக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தமிழக அரசு அறிவித்த நகைக்கடனை தள்ளுபடி செய்யக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் முடங்கியாா் சாலையில் ராஜபாளையம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் உள்ளது. இந்த வங்கியில் 500-க்கும் மேற்பட்டோா் நகைக் கடன் வாங்கியுள்ளனா். தமிழக அரசு தற்போது கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த வங்கியிலும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது நகைக் கடனுக்கு அரசிடம் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருங்கள் எனக் கூறினாா். அதை ஏற்காத பொதுமக்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com