ராஜபாளையத்தில்பெண்கள் சாலை மறியல்

ராஜபாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தென்காசி சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தென்காசி சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூா் பகுதிக்குள்பட்ட கம்மாபட்டி பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பல்வேறு அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அப்பகுதி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோா் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரன் மற்றும் ராஜபாளையம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீா் வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com