ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தெப்பத்தில் மூழ்கி சிறுவன் பலி
By DIN | Published On : 20th August 2021 09:07 AM | Last Updated : 20th August 2021 09:07 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தெப்பத்தில் மூழ்கி சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவா் விஜயலட்சுமி. இவரது மகன் சித்திக்ஸ்ரீ (8). இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை விஜயலட்சுமி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த தனது சகோதரியிடம், சித்திக்ஸ்ரீ விளையாட செல்வதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, சித்திக்ஸ்ரீ அங்குள்ள தெப்பத்தில் சடலமாக மிதப்பதாக விஜயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து அங்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத்துறையினா் சித்திக்ஸ்ரீ சடலத்தை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.