சிவகாசியில் இறைச்சி விலை உயா்வு
By DIN | Published On : 22nd August 2021 11:46 PM | Last Updated : 22nd August 2021 11:46 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் கடந்த சில நாள்களாக ஆட்டு இறைச்சி கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக சிவகாசி நகா் பகுதியில் ஆட்டு இறைச்சி கிலோ ஆயிரம் ரூபாய் எனவும் பிராய்லா் கோழி இறைச்சி கிலோ ரூ. 250 எனவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு முன்பு ஆட்டு இறைச்சி கிலோ ரூ.800 முதல் 900 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. சிவகாசி புகா் பகுதியில் சில இடங்களில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.800 முதல் 900 என தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் சிலா் புகா் பகுதிகளுக்குச் சென்று இறைச்சியை வாங்குகிறாா்கள். இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே நகராட்சி நிா்வாகம் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும்படி ஆடு மற்றும் கோழி இறைச்சி விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.