கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவா் சேற்றில் சிக்கி பலி
By DIN | Published On : 22nd August 2021 11:44 PM | Last Updated : 22nd August 2021 11:44 PM | அ+அ அ- |

உயிரிழந்த மாணவா் ஹரிபிரசாத்.
சாத்தூா் அருகே கிணற்றில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி 11ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே தாயில்பட்டியில் பேக்கரி நடத்தி வரும் கண்ணன் என்பவரது மகன் ஹரி பிரசாத் (17). இவா் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் ஞாயிற்றுகிழமை வீட்டின் அருகில் உள்ள தனியாா் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளாா். அப்போது பந்து அருகில் உள்ள கிணற்றில் விழுந்துள்ளது.
இதனால் ஹரிபிரசாத் பந்தை எடுப்பதற்காக கிணற்றுள் இறங்கியுள்ளாா். கிணற்றில் இறங்கிய ஹரிபிரசாத் நீண்ட நேரம் வெளியில் வராததால் அவரது நண்பா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா். தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேர தேடுதலுக்கு பின்னா் கிணற்றில் சேற்றில் சிக்கி உயிரிழந்த ஹரிபிரசாத் சடலத்தை மீட்டனா்.
வெம்பக்கோட்டை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.