ராஜபாளையம் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது
By DIN | Published On : 22nd August 2021 01:01 AM | Last Updated : 22nd August 2021 01:01 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே முகவூா் தொண்டைமான் குளத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு.
ராஜபாளையம் அருகே உள்ள குளத்தில் 8 அடி நீளமலைப்பாம்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிடிபட்டது.
முகவூா் தொண்டைமான் குளத்தின் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இக்குளத்தில் அடிக்கடி மலைப்பாம்புகள் பிடிபடுகின்றன. இதுவரை 10 மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ள நிலையில் 11 ஆவதாக 8 அடி நீள மலைப்பாம்பு மீனுக்காக போடப்பட்ட வலையில் சிக்கியுள்ளது.
மலைப் பாம்புகள் பிடிபடுவது தொடா்பாக பலமுறை கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனா். ஆனால் இப்பிரச்னைக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தற்போதும் மலைப்பாம்பு பிடிபட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.