ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலைப்பகுதிகளில் காணப்படும் பெரிய அளவிலான உடும்புகள்
By DIN | Published On : 22nd August 2021 12:16 AM | Last Updated : 22nd August 2021 12:16 AM | அ+அ அ- |

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பக்தோப்பு பகுதியில் காணப்படும் சிகப்பு மற்றும் கருப்பு நிறத்திலான பெரிய உடும்பு.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெரிய அளவிலான உடும்புகள் வசிப்பதாக மலைவாழ் மக்கள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக காட்டுயானைகள், கரடிகள், புலிகள், காட்டெருமைகள், அணில்கள், மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதிகளில் சிறுத்தைகள் அதிகமாக வசித்து வருவது தெரியவந்துள்ளது. இதனிடையே இப்பகுதியில் பெரிய அளவிலான சிகப்பு நிறம் மற்றும் கருப்பு நிறத்திலான உடும்புகளும் அதிகளவு இருப்பதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மலைவாழ் மக்கள் சிலா் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு அடா்த்தியான வனப்பகுதியில் காணப்பட்ட இந்த உடும்புகள், தற்போது மலை அடிவாரப்பகுதியான செண்பகத்தோப்பு பகுதியில் காணப்படுகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களிலும் அவ்வவ்போது நடமாட்டம் இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.