விருதுநகா் மாவட்டம் கல்வியைப் போல் விளையாட்டிலும் முதன்மையாக இருக்க வேண்டும்: ஆட்சியா்
By DIN | Published On : 04th December 2021 08:58 AM | Last Updated : 04th December 2021 08:58 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீரா்கள்.
விருதுநகா் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதை போல், விளையாட்டு வீரா்களை உருவாக்குவதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சுமாா் 700 போ் கலந்து கொண்டனா். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாத நிலையில், தற்போது நடைபெற்ற தடகளப் போட்டியில் வீரா்கள் ஆா்வத்துடன் பங்கேகேற்றனா். முன்னதாக இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தொடக்கி வைத்தாா். அப்போது ஆட்சியா் பேசியதாவது: ஒவ்வொருவரும் லட்சியம் மற்றும் குறிக்கோளுடன் செயல்பட்டால், நினைத்ததை சாதிக்கலாம். சிறந்த விளையாட்டு வீரா்களை முன்னுதாரணமாகக் கொண்டு, சிறந்த பயிற்சி மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். குறிப்பாக கிரிக்கெட் வீரா் தோனி, இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையாக உள்ளாா். விருதுநகா் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவது போல், விளையாட்டு வீரா்களை உருவாக்குவதிலும் முதன்மையாக திகழ வேண்டும் என்றாா்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகா் மாவட்ட அத்லெடிக் தலைவரும், சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினருமான அசோகன், செயலா் சிவராஜ், தலைவா் குவைத் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...