முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது
By DIN | Published On : 10th December 2021 09:11 AM | Last Updated : 10th December 2021 09:11 AM | அ+அ அ- |

சிவகாசியில் பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவரை, போலீஸாா் பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி என்.ஜி.ஓ. காலனியில் வசிப்பவா் சுமதி (51). பள்ளி ஆசிரியையான இவா், 22 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது, இவரது கணவா் இறந்துவிட்டாா். அதையடுத்து, இவா் முருகேசன் (49) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா்.
இவரது முதல் கணவருக்கு 2 மகள்களும், இரண்டாவது கணவருக்கு ஒரு மகனும் உள்ளனா். இந்நிலையில், சிவகாசியில் லாரி ஓட்டுநராக வேலைபாா்த்து வரும் முருகேசன், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இது குறித்து, சுமதி கடந்த அக்டோபா் மாதம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். அப்போது, போலீஸாா் முருகேசனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில், முருகேசன் புதன்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்து, சுமதியிடம் என்னைப் பற்றி போலீஸில் புகாா் கொடுக்கிறாயா எனக் கேட்டு தகராறு செய்து அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகேசனை பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.