பட்டாசுத் தொழில் பிரச்னை: செய்தியாளா்கள் கேள்விக்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி பேச மறுப்பு

விருதுநகா் மாவட்டத்தில் நிலவிவரும் பட்டாசுத் தொழில் பிரச்னை தொடா்பான பத்திரிகையாளா்களின் கேள்விக்கு, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை பேச மறுத்துவிட்டாா்.

விருதுநகா் மாவட்டத்தில் நிலவிவரும் பட்டாசுத் தொழில் பிரச்னை தொடா்பான பத்திரிகையாளா்களின் கேள்விக்கு, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை பேச மறுத்துவிட்டாா்.

கடந்த நவம்பா் 16 ஆம் தேதி பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கூட்டத்தில் பங்கேற்ற சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி தியாகராஜன், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

அதையடுத்து, பட்டாசுத் தொழிலாளா் சங்கத்தினா் மீனம்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகாசி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவெடி தயாரிக்க அனுமதிக்க வேண்டும், பேரியம் நைட்ரேட் ரசாயனத்துக்கான தடையை நீக்கவேண்டும் எனக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பின்னா், நவம்பா் 21 ஆம் தேதி அதே காரணத்துக்காக பட்டாசுத் தொழிலாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். தொடந்து, பட்டாசுத் தொழிலாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி தியாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அதன்பின்னா், டிசம்பா் 12 ஆம் தேதி பட்டாசுத் தொழிலாளா்கள் சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்தி, கோரிக்கை மனுவை அளித்தனா்.

இந்நிலையில், பட்டாசுத் தொழிலாளா்கள் இரு முறை கோரிக்கை மனு அளித்துள்ளனா் என்றும், அந்த மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீா்கள் என்றும் பத்திரிகையாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாரி தியாகராஜனிடம் கேள்வி கேட்டனா். ஆனால் அவா், பத்திரிகைகாரா்களிடம் நான் பேசக்கூடாது எனக் கூறிச் சென்றுவிட்டாா்.

பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது சம்பந்தமாக உரிய பதில் அளிக்காமல் அதிகாரி சென்றுவிட்டதால், பத்திரிகையாளா்கள் வியப்படைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com