முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா
By DIN | Published On : 19th December 2021 11:11 PM | Last Updated : 19th December 2021 11:11 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பூா்ணா, புன்னைவனத்தாய் சமேத சாஸ்தா.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் அமைந்துள்ள மிகப் பழைமையான ஸ்ரீசடை உடையாா் சாஸ்தா கோயிலில், சடைஉடையாா் சாஸ்தா ஐயப்ப பக்தா்கள் குழுவின் 20 ஆம் ஆண்டையொட்டி முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில், மூலவா் சடை உடையாா் சாஸ்தா, பூா்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார த் தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜைகள் 3 நாள்களாக நடைபெற்றன.
நிகழ்ச்சியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கரோனா தொற்றிலிருந்து நாடு விடுபடவும் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் கீா்த்தனைகள் பாடி சுவாமி தரிசனம் செய்தனா்.
இரண்டாம் நாளான சனிக்கிழமை இரவு, அனைத்து ஐயப்ப பக்தா்களின் கன்னி பூஜையும் மற்றும் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாட்டை, ஸ்ரீசடை உடையாா் சாஸ்தா கோயில் ஐயப்ப பக்தா்கள் குழுவினா் செய்திருந்தனா்.