முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி. அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்
By DIN | Published On : 19th December 2021 11:10 PM | Last Updated : 19th December 2021 11:10 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி மற்றும் வைத்தியலிங்கபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ஆட்டோ மூலம் கடத்தப்படுவதாக தனிப்படை காவல் சாா்பு- ஆய்வாளா் ஆனந்தகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மடவாா் வளாகம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால், ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞா் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். உடனே, போலீஸாா் ஆட்டோவில் சோதனையிட்டபோது, அதில் 8 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் ஆட்டோவுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது குறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.