திருச்சுழி அருகே கார் விபத்து: முதியவர் பலி, குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலக்குண்டு பகுதியில் புதன்கிழமை கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் அதே கா
கார் விபத்தில் பலியான முதியவர் நடேசன்(60). (வலது ஓரம் இருப்பவர் ). உடன் கார்விபத்தில் படுகாயமடைந்த நடேசனின் குடும்பத்தார் மற்றும் உறவினர் செல்வக்குமார்.
கார் விபத்தில் பலியான முதியவர் நடேசன்(60). (வலது ஓரம் இருப்பவர் ). உடன் கார்விபத்தில் படுகாயமடைந்த நடேசனின் குடும்பத்தார் மற்றும் உறவினர் செல்வக்குமார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலக்குண்டு பகுதியில் புதன்கிழமை கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் அதே காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சையிலுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கூடச்சேரி ஊரைச்சேர்ந்தவர் நடேசன்(60).இவர்,தனது மனைவி  பாப்பாத்தி( 54),மகள் சுபாஷிகா(29) மற்றும் சுபாஷிகாவின் கணவர் செல்வக்குமார்(31) என்பவருடனும்,பேத்தி சாதுர்யா(2) என மொத்தம் 5 பேர் ஒரு காரில் தங்களது ஊரிலிருந்து ஆன்மீகச் சுற்றுலா கிளம்பினர்.

இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை திருச்செந்தூருக்குச் சென்றுவிட்டு பின்னர் புதன்கிழமை காலை திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு திருச்சுழியிலுள்ள ரமணர் பிறந்த இல்லம் ஆகியவற்றைத் தரிசித்து விட்டு, அதையடுத்து காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனராம்.

இதன்படி அவர்கள் அருப்புக்கோட்டையைக் கடந்து திருச்சுழியை நோக்கிக் காரில் சென்றனர். காரை நடேசனின் மருமகன் செல்வக்குமார் இயக்கியுள்ளார்.அவர்களது கார் திருச்சுழி அருகே சித்தலக்குண்டு பகுதியைக் கடந்து கொண்டிருந்தபோது, எதிரில் வந்த பேருந்திற்கு இடம் தருவதற்காக காரை சாலையோரம் செலுத்தியபோது,எதிர்பாராவிதமாக சாலையிலிருந்த மழைநீர் ஓடைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த வயலுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

இதில், ஓட்டுநர் இருக்கை அருகே அமர்ந்து பயணித்த நடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குழந்தை சாதுர்யா உள்பட  சுபாஷிகா, பாப்பாத்தி, செல்வக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காரில் சிக்கி வெளியேறமுடியாமல் தவித்த, அந்த நால்வரையும் தீயணைக்கும் படை வீரர்களை வரவழைத்து, மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிந்த திருச்சுழி காவல்துறையினர் விபத்து நடந்தவிதம் குறித்தும்,காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com