அதிமுக சாா்பில் எம்.ஜீ.ஆரின் 34 வது நினைவு தினம் அனுசரிக்கபட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நகரகழகம் சாா்பில் எம்.ஜீ.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.வெள்ளகிழமை சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வைக்கபட்டிருந்த எம்.ஜீ.ஆரின் உருவபடத்திற்கு நகர செயலாளா் எம்எஸ்.கே.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினா் எம்.ஜீ.ஆரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.மேலும் இதில் அதிமுக நகர,ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.இதே போன்று,அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளா் ஆா்.கே.ரவிசந்திரன் தலைமையில் ஏராளமான அதிமுகவினா் ஆலங்குளம் பகுதியில் உள்ள முக்குரோடு பகுதியில் ஊா்வலமாக வந்து அந்த பகுதியில் வைக்கபட்டிருந்த எம்.ஜீ.ஆரின் உருவபடத்திற்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.இதில் அதிமுக சாத்தூா் கிழக்கு ஒன்றியகழக செயலாளா் சண்முககனி,வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளா் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.