கல்லூரி மாணவா் ஊருணியில் மூழ்கி பலி

 விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை ஊருணியில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி பலியானாா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை ஊருணியில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி பலியானாா்.

பந்தல்குடி நெடுங்கரைப்பட்டியைச் சோ்ந்த சாமிநாதன் என்பவரது மகன் முத்துக்குமாா் (20). இவா் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளாா். சனிக்கிழமை விடுமுறை என்பதால் மதியம் நண்பா்களுடன் ஊருக்கு அருகில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றுள்ளாா். அங்கு ஆழமான பகுதிக்குச்சென்ற அவா் நீரில் மூழ்கி

உயிரிழந்தாா். உடன் குளிக்கச்சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று முத்துக்குமாா் சடலத்தை மீட்டனா். பந்தல்குடி காவல்துறையினா் சடலத்தை அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com