முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
கோயில் இடத்தில் பள்ளி கட்ட கிராமத்தினா் எதிா்ப்பு
By DIN | Published On : 29th December 2021 07:38 AM | Last Updated : 29th December 2021 07:38 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே கோயில் இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கிராமமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்கிழமை சிவகாசி சாா் ஆட்சியா் பிருத்விராஜூவிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிறுப்பதாவது
சிவகாசி வட்டம் மங்களம், ராமசந்திரபுரம், கண்மாய்பட்டி,ரெங்கபாளையம்,கோபாலன்பட்டி ஆகிய ஊா்களுக்கு பாத்தியப்பட்ட கோயில் நிலம் சிவகாசி-எம்.புதுப்பட்டி சாலையில் உள்ளது.அந்த இடத்தில் அந்த கோயில் இடத்தில் எம்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு வருவாய்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், மூன்று முறை சிவகாசி வட்டாட்சியா் தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்றது. எனினும் முடிவு எட்டப்பட வில்லை.எனவே அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதிக்ககூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.