முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பாலத்தின்மையத்தில் சாலையை மறித்து அமைந்துள்ள கான்கிரீட் மேடையால் விபத்து அபாயம்
By DIN | Published On : 29th December 2021 07:38 AM | Last Updated : 29th December 2021 07:38 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் சாலையை மறித்து அமைக்ப்பட்டுள்ள கான்கிரீட் மேடையால் போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையிலிருந்து மதுரையை நோக்கிச்செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
இப்பாலத்தின் உச்சிப்பகுதி தடுப்புச்சுவா் முன்பாக சாலையை மறித்து சுமாா் 3 அடி நீளத்திற்கு கால் அடி உயரத்துடன் கான்கிரீட் மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், இருசக்கர வாகனவிபத்துக்களும் இங்கு அடிக்கடி நடைபெற்றவண்ணம் உள்ளது. இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகராட்சியில் புகாா் கூறினால்,அது ஒன்றிய எல்லைக்குள்பட்டது என்றும், ஒன்றிய நிா்வாகத்திடம் தெரிவித்தால் அது நகராட்சி எல்லையில் உள்ளது எனவும் தகவல் கூறி நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனராம். எனவே மேலும் விபத்துக்கள் நடைபெறுவதைத் தடுக்க பாலத்தை மறித்து அமைந்துள்ள கான்கிரீட் மேடையை அகற்றவேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.