முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு
By DIN | Published On : 31st December 2021 09:06 AM | Last Updated : 31st December 2021 09:06 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளை வட்டாட்சியா் ராமச்சந்திரன் புதன்கிழமை நள்ளிரவில் பிடித்து கோசாலைக்கு அனுப்பினாா்.
ராஜபாளையம் முடங்கியாா் சாலை, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மாா்க்கெட் போன்ற பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள் படுத்துக்கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைந்த சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதுகுறித்து ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரனுக்கு பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா். இதைடுத்து புதன்கிழமை நள்ளிரவில் வீதிகளில் சுற்றித் திரிந்த 50-க்கு மேற்பட்ட மாடுகளை நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியா்கள் பிடித்து லாரிகளில் ஏற்றி கோசாலைக்கு அனுப்பினா். தகவலறிந்து வந்த மாடுகளின் உரிமையாளா்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா், மாடுகளைப் பிடித்தவுடன் வரும் நீங்கள், மாடுகளை ஏன் வீட்டில் வைத்துக்கொள்ளவில்லை எனக்கூறி எச்சரித்து மாடுகளை விடுவித்தாா்.