விருதுநகரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 09:48 PM | Last Updated : 06th February 2021 09:48 PM | அ+அ அ- |

விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள்.
விருதுநகா்: விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மண்டலத் தலைவா் பிச்சை தலைமை வகித்தாா். இதில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு டிஏ உயா்வை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியா்கள் பெற வேண்டிய பண பலன்களை காலதாமதமின்றி வழங்கவேண்டும். போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் மருத்துவ திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் பொதுச்செயலா் தங்கப்பழம், தலைவா் வேலுச்சாமி உள்பட ஓய்வு பெற்ற ஊழியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.