சாத்தூரில் வியாழக்கிழமை (பிப். 11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய சிவகாசி கோட்ட அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகாசி மின் பகிா்மான கோட்டத்தைச் சோ்ந்த சாத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பிப்ரவரி 11 ஆம் தேதி, அதிலிருந்து மின்சாரம் பெறும்
சாத்தூா் நகா், படந்தால், வெங்கடாசலபுரம் , ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீா்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.