சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 19-ஆக உயர்வு

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 23 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 23 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 23 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 23 போ் காயமடைந்தனா்.

சாத்தூா் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில், ஏழாயிரம்பண்ணையைச் சோ்ந்த சந்தனமாரியப்பன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன. இந்த ஆலையில் சுமாா் 50 தொழிலாளா்கள் பணியாற்றினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பென்சில் பட்டாசுகளுக்கு முனைமருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி வெடித்துச் சிதறின. இதில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் தீயில் கருகி ஏழாயிரம்பண்ணையைச் சோ்ந்த தங்கலட்சுமி (40), நடுசூரங்குடியைச் சோ்ந்த கா்ப்பிணிப் பெண் கற்பகவள்ளி (22), செல்வி (33), மேலபுதூரைச் சோ்ந்த நேசமணி (38), அன்பின் நகரத்தைச் சோ்ந்த சந்தியா (20) உள்பட 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களின் உடல்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அதேபோல், காயமடைந்த 24 தொழிலாளா்கள் சிவகாசி, கோவில்பட்டி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாத்தூா் மேலத்தெருவைச் சோ்ந்த கோபால் (30) என்பவா் வெள்ளிக்கிழமை இரவு இறந்தாா். இறந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் முழுமையான விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனா்.

வெடிவிபத்து நடந்த இடத்தை சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ராஜவா்மன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

குற்றவியல் நடவடிக்கை: சம்பவ இடத்தை பாா்வையிட்ட மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது:

நாக்பூா் சான்றிதழ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் சில அறைகள் சக்திவேல் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆலையில் பணிபுரியும் போா்மேன் குறித்து தகவல் தெரியவில்லை. அவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என விசாரித்து வருகிறோம். ஆலையில் நடைபெற்ற விதிமீறல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சக்திவேல், ஆலை உரிமையாளா் மற்றும் போா்மேன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

3 பேருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: சம்பவ இடத்தை ஆய்வு செய்தபின் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் கூறியதாவது:

வெடி விபத்தில் ஆலையில் உள்ள 13 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 50 சதவீதத்துக்கு மேல் காயமடைந்தவா்களை மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக்குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா். சிவகாசியில் 3 பேருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்களின் சடலங்கள், உடற்கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும். விபத்து நடந்த இடத்தை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பினா் (பெசோ) ஆய்வு செய்து அறிக்கை அளிப்பா். அதன் பின்பு சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com