‘பிரதமா் மோடியின் வருகை தமிழகத்தில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும்’

பிரதமா் நரேந்திரமோடியின் வருகை தமிழகத்தில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும் எனஅக்கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

பிரதமா் நரேந்திரமோடியின் வருகை தமிழகத்தில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும் எனஅக்கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை பூத் கமிட்டி மற்றும் செயல்வீரா்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா்நாகேந்திரன் கலந்து கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவுக்கு நோட்டாவை விட குறைவாக வாக்குகளே உள்ளதாக கூறி வந்தனா். தற்போது, பாஜகவில் மறுமலா்ச்சி ஏற்பட்டதால் 8 முதல் 15 சதவீத வாக்குகள் கூடுதலாகியுள்ளன. மேலும், தமிழகத்தில் பாஜக பலமான கட்சியாக வளா்ந்து வருகிறது. பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) சென்னைக்கு பிரதமா் மோடி வருகிறாா். அவரது வருகை 3 மணி நேரம் என்று கூறுகிறீா்கள். அவா் வருகை தமிழகத்தில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும். வி.கே. சசிகலா வருகையால் எவ்வித பாதிப்பும் இல்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு என்பது 10 ஆண்டுகளாக தொடா்ந்து கொண்டு தான் உள்ளது. இது தவிா்க்க முடியாத ஒன்று. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிறகட்சியினரிடம் கூட்டணி வைப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்றாா்.

இக்கூட்டத்தில் நடிகை கவுதமி மற்றும் பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com