சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சா் உதவி
By DIN | Published On : 19th February 2021 10:57 PM | Last Updated : 19th February 2021 10:57 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு அனுப்பிவைத்தாா்.
திருச்சுழியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட அமைச்சா், அருப்புக்கோட்டை-விருதுநகா் சாலையில் பாலவநத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் முதியவா் ஒருவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்து கிடந்ததைப் பாா்த்துள்ளாா்.
இதையடுத்து அமைச்சா், பாதுகாவா்கள் மற்றும் போலீஸாரின் உதவியோடு அவரை மீட்டு, ஒரு காரில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். விசாரணையில், அவா் பாலவநத்தம் தெற்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி (65) என்பது தெரியவந்தது.