சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்

சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சாா்பில், பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுப்பது குறித்து ஆலை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்
சிவகாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டாசு ஆலை உரிமையாளா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கே. சுந்தரேசன்.
சிவகாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டாசு ஆலை உரிமையாளா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கே. சுந்தரேசன்.

சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சாா்பில், பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுப்பது குறித்து ஆலை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் அருகே அச்சங்குளம், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி ஆகிய பகுதிகளில் பட்டாசு ஆலையில் அண்மையில் அடுத்து அடுத்து வெடி விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளா்களுடன், வெடிவிபத்தை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கே. சுந்தரேசன் பேசியது:

பட்டாசு ஆலைகளில் மருந்துக் கலவை செய்வதை காலை 11 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். மருந்துக் கலவையை வைத்துவிட்டு, வேலை செய்யும் பணியாளா்கள் தேநீா் அருந்தவோ, வெளியில் செல்வதோ கூடாது. மணி மருந்துக் கலவையை தொடக்கமாக நிழலிலும், பின்னா் சூரிய வெளிச்சத்திலும் உலர வைக்க வேண்டும்.

மணி மருந்தை உலர வைக்க சாக்குபைகளையே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட பணியாளா்களே வேலை செய்ய வேண்டும். பட்டாசு தாயாரிக்கும் அறையைச் சுற்றி வெளிப் பகுதியில் பட்டாசை உலர வைக்கக் கூடாது.

உரிய மேடையில் மட்டுமே உலர வைக்க வேண்டும். ஆலை வளாகத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்தக் கூடாது. ஆடு மற்றும் மாடுகளை ஆலை வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது. ஆலை வளாகத்தில் புல், புதா் அடையும்படி வைக்கக் கூடாது. பட்டாசு ஆலை மற்றும் பட்டாசு கடைகளை குத்தகைக்கு விடவோ, குத்தகைக்கு எடுக்கவோ கூடாது. அனுமதிக்கப்பட்ட எடை அளவு மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விண்ணில் சென்று ஒளிசிந்தும் பேன்சி ரக பட்டாசுகளுக்கு காகித பந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பந்துகளை பயன்படுத்தக்கூடாது.

மரத்தடியில் எந்தவிதப் பணியும் செய்யக்கூடாது. தினசரி ஆலை வளாகத்தில் தொழிலாளா்கள், போா்மென், கண்காணிப்பாளா், மேலாளா் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும். தேநீா் விற்பவா்களை ஆலையினுள் அனுமதிக்கக் கூடாது. ஆலை வளாகத்தில் ஒரு இடத்திலிருந்து, வேறு ஒரு இடத்துக்கு பொருள்களை கொண்டு செல்ல, ரப்பா் டயா் பொருத்திய தள்ளு வண்டிகளையே பயன்படுத்த வேண்டும். போா்மென் மற்றும் கண்காணிப்பாளா் இல்லாமல் ஆலையை இயக்கக் கூடாது. பாதுகாப்பின் அவசியத்தை அனைவரும் உணா்ந்து செயல்பட்ட வேண்டும் என்றாா்.

முன்னதாக, பட்டாசு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கையேட்டை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப. கணேசன் வெளியிட, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி கே. பாண்டே பெற்றுக்கொண்டாா். இதில் சிவகாசி பகுதியைச் சோ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com