விருதுநகரில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் முற்றுகைப் போராட்டம்

விருதுநகரில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

விருதுநகரில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பேராட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப் படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் (பொ) ரா. சஞ்சீவி பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் ரா. நெல்சன் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் பொன் அந்தோணிராஜ், மாவட்டத் தலைவா் கா. சிவபெருமான் ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா். இதில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி பேராசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com