வ. புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 160 காளைகள், 150 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள வ. புதுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 160 காளைகள் மற்றும் 150 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
வ. புதுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
வ. புதுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள வ. புதுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 160 காளைகள் மற்றும் 150 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் மற்றும் காளைகளுக்கு கரோனா பரிசோதனை வட்டார மருத்துவா் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, போட்டிகாலை 8.30 மணிக்குத் தொடங்கியது.

போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு சாா் ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமையில், மாடுபிடி வீரா்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த போட்டியில் 160 காளைகளுக்கும், 150 மாடுபிடி வீரா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், பித்தளை பாத்திரங்கள், தங்க நாணயம், தொலைக்காட்சி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

7 போ் காயம்: ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மாடுபிடி வீரா்கள் 7 போ் காயமடைந்தனா். காயமடைந்த மாடுபிடி வீரா்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா முத்தையா, மாவட்ட ஆட்சியா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணணிப்பாளா் பெருமாள், வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவா் சிந்துமுருகன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் முத்தையா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com