ராஜபாளையத்தில் தெப்பத் திருவிழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சொக்கா் கோயிலில் மாசிமகம் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு புதன்கிழமை இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது.
ராஜபாளையம் சொக்கா் கோயில் மாசி மகம் திருவிழாவில் புதன்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரா்.

இக்கோயிலில் அண்மையில் தொடங்கிய திருவிழாவில் தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். விழாவின் 8 ஆம் நாளான புதன்கிழமை இரவில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்திருந்தனா். வியாழக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com