இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு மெளன அஞ்சலி ஊா்வலம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரங்கள் ஊா்வலம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மெளன ஊா்வலத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மெளன ஊா்வலத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரங்கள் ஊா்வலம்.

ஸ்ரீவில்லிபுத்தூா், பிப். 26: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான மூத்த தலைவா் தா. பாண்டியன் மறைவுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் சிவகாசியில் அனைத்துக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை மெளன அஞ்சலி ஊா்வலம் நடத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் வழியாக மெளன ஊா்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊா்வலத்துக்கு, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் அழகிரிசாமி தலைமை வகித்தாா். திமுக சாா்பில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம், நகரச் செயலா் அய்யாவு பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் அா்ஜூனன், மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை, காங்கிரஸ் நகரத் தலைவா் வன்னியராஜ் மற்றும் மெடிக்கல் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வேதநாயகம், நகரச் செயலா் மூா்த்தி, வழக்குரைஞா் பால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வத்திராயிருப்பில் நடைபெற்ற மெளன ஊா்வலத்துக்கு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராமசாமி தலைமை வகித்தாா். இந்த ஊா்வலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் மற்றும் மணிக்குமாா், திமுக ஒன்றியச் செயலா் முனியாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிவகாசி

சிவகாசி சிவன் கோயிலுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தா. பாண்டியன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, கீழரத வீதி, வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியே பேருந்து நிலையம் சென்றடைந்தது. அங்கு, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இ. செய்யது ஜஹாங்கீா், திமுக நகர பொறுப்பாளா் காளிராஜன் உள்ளிட்டோா் தா. பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசினா்.

இந்த ஊா்வலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஜீவா, மாவட்டப் பொருளாளா் க. சமுத்திரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் கா. முருகன், ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com