அருப்புக்கோட்டை கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டையிலுள்ள பல்வேறு கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் ஆர்வமுடன்  கலந்து கொண்டு வழிபட்டனர்.
அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற தீப ஆரத்தி.
அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற தீப ஆரத்தி.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள பல்வேறு கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் ஆர்வமுடன்  கலந்து கொண்டு வழிபட்டனர்.

அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் வெள்ளிக்கிழமை புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு காலை சுமார் 7 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்று. சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு பாபா பக்தர்களுக்குக் காட்சி தந்தார். இதையடுத்து நடைபெற்ற நண்பகல் ஆரத்தியில் இசையுடன் நடைபெற்ற பக்திப்பாடல் மற்றும் ஆரத்தியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு வகையான வண்ண, வண்ண மலர்கள், மாலைகளையும், இனிப்புகள், பழங்கள் உள்ளிட்டவற்றையும் பாபாவிற்குப்படைத்து திரளான பக்தர்கள் வழிபட்டனர். வழிபாட்டில் கலந்துகொண்டோர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மலையரசன் என்கிற அருள்மிகு நித்தியானந்த சுவாமி கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் அமைந்த அருள்மிகு மலையரசன் என்கிற நித்தியானந்த சுவாமி கோயிலில் புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றறு. சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு மலையரசன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் காலை முதலே திரளாக வந்த பக்தர்கள், குடும்பம் குடும்பமாக வந்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து, மலர்மாலை படைத்து புத்தாண்டு சிறப்பாக அமைய நித்தியானந்த சுவாமியை வழிபட்டனர். 

இதேபோல அருப்புக்கோட்டையில் உள்ள முக்கிய கோவில்களான சொக்கலிங்கபுரம் அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோயிலிலும், நகர் மையத்திலுள்ள அருள்மிகு தாதன்குளம் விநாயகர் கோயிலிலும், மேலும் மதுரை செல்லும் சாலையில் அமைந்த அருள்மிகு அமுதலிங்கேஸ்பரர் கோயிலிலும், விருதுநகர் செல்லும் சாலையில் அமைந்த அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com