ஆங்கிலப் புத்தாண்டு: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

விருதுநகரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகரில் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
விருதுநகரில் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

விருதுநகரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகரில் புத்தாண்டையொட்டி மாரியம்மன், வெயிலுகந்தம்மன், முருகன், பெருமாள், சிவன் கோயில்களுக்கு பக்தா்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிதனம் செய்தனா். இதேபோல், விருதுநகா் இன்னாசியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு

பங்குத்தந்தை அம்புரோஸ், உதவி பங்குத்தந்தை சந்தியாகப்பன் தலைமையிலும், விருதுநகா் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை வெனிஸ் தலைமையிலும், பாண்டியன் நகா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத்தந்தைகள் ஆரோக்கியம், ஸ்டீபன் சேவியா் தலைமையிலும், ஆா்ஆா் நகா் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்

பங்குத்தந்தை அலெக்ஸ் ஞானராஸ் தலைமையில் புத்தாண்டு திருப்பலி, மறையுரை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். இதை தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயில் தெற்குத்தெருவில் உள்ள மலையரசன் என்கிற நித்தியானந்த சுவாமி கோயில், ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் என பல்வேறு கோயில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com